• July
    22
    Monday

Main Area

Main



விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் ராக்கர்ஸ்!

விஷால்
விஷால்
Loading...

சென்னை: நடிகர் விஷாலின் திருமண நிச்சியதாரத்தக்கு தமிழ் ராக்கர்ஸ் வாழ்த்து தெரிவித்தாக பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஷாலும், தொழிலதிபரின் மகளும் நடிகையுமான அனிஷா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம் நேற்று ஹைதராபாத்தில் தனியார் சொகுசு ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு விஷாலின் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

vishal

இதில் நடிகை குஷ்பு, சுந்தர் சி, ரமணா, மனோபாலா, நந்தா, ஸ்ரீமன், பசுபதி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் சென்றுள்ளதாகத் தெரிகிறது. 

vishal

இந்நிலையில் விஷால்- அனிஷாவை வாழ்த்தி பலரும் பதிவு வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் தமிழ் ராக்கர்ஸ் விஷாலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் படி ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில்' என் மச்சானின் நிச்சியதார்தம்,வாழ்த்துக்கள்' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ் ராக்கர்ஸ்யின் அட்மின் நடிகர் விஷால் என்று பலரும் கூறிவரும் நிலையில்,இப்பதிவையும் விஷால்யை பிடிக்காதவர்கள் செய்திருக்க வேண்டும் அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மேலும், இந்த இளம் ஜோடியின் திருமணம் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.