• July
    17
    Wednesday

Main Area

Main



தமிழகத்தில் கருத்துக்கணிப்பு எங்களுக்கு சாதமாக இல்லை- தமிழிசை

Tamilisai
Tamilisai
Loading...

தமிழகத்தில் கருத்து கணிப்பு எங்களுக்கு சாதகமாக இல்லை  என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வட இந்தியா கருத்து கணிப்பு வரவேற்க தக்கது. ஆனால் தமிழகத்தில் எங்களுக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு இல்லை. மேலும் கருத்துக்கணிப்புகளை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான். கருத்துக்கணிப்புகளுக்கு பிறகு பாஜக இருக்கிறது எனக்கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் படுத்துகிறார்கள். மோடியின் நல்ல திட்டம் மக்களுக்கு கிடைக்க வேண்டும். பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோர் டெல்லியில் நடைபெறும் கூட்டணி கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

மேலும் தமிழகத்தில் உள்ள பாஜக கூட்டணி கட்சிகளும் பங்கேற்கின்றனர். கோட்சே தொடர்பாக பேசிய பிறகு கமல் பிரபலமாக மாறி விட்டார் என்று அக்கட்சியின் துணை தலைவர் சொல்லி இருக்கிறார். இது தேவையான பிரபலமான என்று பார்க்க வேண்டும். கமல், தினகரன், சீமான், ஆகியோர் தமிழக மக்களை பிரித்து வாக்கு சேகரிக்க நினைக்கிறார்கள்” என்று கூறினார். 

2018 TopTamilNews. All rights reserved.