• July
    16
    Tuesday

Main Area


கமல் ஹாசன்

சுத்தமாய் கைகழுவிய பாஜக... மொத்தமாய் தவிக்க விடும் அதிமுக... கமலால் தேமுதிகவுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

பழையதோ, புதியதோ... ஓடுகிற குதிரைக்கு தான் மவுசு அதிகம் என்பதை உணர்ந்து கொண்ட அதிமுக தற்போது தேமுதிகவை கழற்றி விடும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


Jayakumar

தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறார்- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் தூங்கும் படம் வாட்சப்பில் வெளியாகி வருகிறது, பாவம் தென் சென்னை தொகுதி மக்கள் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.


மைத்ரேயன் - மோடி

ஜெயலலிதா - எடப்பாடி சாதிக்காததை மோடியிடம் சாதித்துக் காட்டிய மைத்ரேயன்... அசத்தல் கெத்து..!

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் செய்யாததை மைத்ரேயன் நமக்காக செய்து இருக்கிறார் என மைத்ரேயனை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.


Surya

சூர்யாவை அரசியலுக்கு அழைக்கும் நெட்டிசன்கள்...  ட்விட்டரில் ட்ரெண்டாகும் #StandWithSuriya, #SuryaFCWarnsBJPnADMK! 

நடிகர் சூர்யா சமீபத்தில் தான் நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Dinamalar

தினமலரை வசைப்பாடும் நெட்டிசன்கள்.... போகாத சந்திராயனை விண்ணில் செலுத்திய கொடுமை.!

சந்திராயன் 2 செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் பணி கடைசி நேரத்தில் தொழில்நுட்பக்காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து தினமலர் நாளிதழ் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.


ஜோதிடர் பாலாஜி ஹாசன்

மாதவன், ஹர்பஜன் சிங் பாராட்டிய ஜோதிடர் பாலாஜி ஹாசன்..!

உலக கோப்பை 2019 கணிப்பு ; ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ஜோதிடர் பாலாஜி ஹாசன்..! நடந்து முடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்ற செய்திக்கு நிகராக பேசப்பட்டு வரும் இன்னொரு...


Tamilisai

சரத்குமார் ஒரு சாதனைக்குமார்...! தமிழிசை அதிரடி!!

காமராஜருக்கு மணிமண்டபத்தை அமைத்து சரத்குமார் சாதனைக்குமாராக மாறியுள்ளார் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 


கர்ம வீரர் காமராஜரைப் பற்றிய தெரியாத தகவல்கள்

கர்ம வீரர் காமராஜர் என்று இன்றைய தலைமுறையும் காமராஜரைக் கொண்டாடுகிறது. அந்த மாபெரும் தலைவரின் சாதனைகளை இந்த தலைமுறையினரும் நினைவு கூர்வது எத்தனைப் பொருத்தம்.  கரம்பை மண்ணும், கொளுத்தும் வெய்யிலும், கரிசல் காடும், வானம் பார்த்த பூமியுமாக இருந்த அன்றைய விருதுநகரில் பிறந்த காமராஜர் முதலமைச்சராக வலம் வந்த போது, மொத்த இந்தியாவுமே தமிழகத்தைத் திரும்பி பார்த்தது. அவரின் சிந்தனையில், மக்களின் பயன்பாட்டிற்காக, நலனுக்காக உதித்த எண்ணற்ற திட்டங்கள் தான் இன்று வரையில் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி பிடித்துக் கொண்டிருக்கிறது.

kamaraj

தேர்தலில் ஒரு முறை தோல்வியைத் தழுவினார் காமராஜர்.  காமராஜரையே மக்கள் தோல்வியடைய வைத்தார்கள் என்று தான் வரலாறு இன்று வரையில் அதன் பக்கங்களில் கறுப்பு மையினால் எழுதிக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில், ‘படிக்காத காமராஜரை படித்த சீனிவாசன் தோற்கடித்தார்’ என்று திமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். திமுகவினரின் இந்த சுவரொட்டி கலாசாரத்தைப் பார்த்துக் கொதித்தெழுந்தார் ஒரு தலைவர். தனது சொந்த பணத்தில், ‘படிக்காத காமராஜர் கட்டிய பள்ளிக்கூடத்தில் படித்த சீனிவாசனின் தேர்தலில் வெற்றி’ என்று விருதுநகர் முழுவதும் சுவரொட்டி அச்சடித்து ஒட்டினார். அந்த தலைவர் தந்தை பெரியார்.

kamaraj

ஆம், அது தான் காமராஜரின் வெற்றி. மக்கள் மனதில் இன்றளவிலும் காமராஜர் நீங்கா இடம் பெற்றிருக்கிறார். அவரை தேர்தலில் தோற்கடித்த சீனிவாசனின் பெயரை காலமும், வரலாறும் மறந்து விட்டது. தமிழகத்தின் கல்வி கண்களைத் திறந்த தலைவராக காமராஜரைக் கொண்டாடுகிறோம். ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தால் ஏறக்குறைய தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடு விழா கண்டன. காமராஜரின் நடவடிக்கையால் அந்த 6000 பள்ளிகளும் மீண்டும் திறப்பு விழா கண்டன. 1954 தொடங்கி 1963 வரையிலான காமராசரின் ஆட்சிகாலம் தமிழகத்தின் பொற்காலம் என்றே இன்றளவும் புகழப்படுகிறது. அவர் ஆட்சி பொறுப்பேற்ற போது 5 ஆயிரத்து 303 ஆக இருந்த ஆரம்ப பள்ளிகளின் எண்ணிக்கை, பத்தே ஆண்டுகளில் 26 ஆயிரத்து 700 ஆக உயர்த்தப்பட்டது. மக்களின் உண்மையான முன்னேற்றம் என்பது அவர்களது கல்வி அறிவை மேம்படுத்துவது தான் என்கிற முயற்சியில், அவரது ஆட்சி காலத்தில் தான் உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சிக் கல்லூரிகள் என திரும்பி திசையெங்கும் கல்வி நிலையங்களாக அறிவொளி வீசிப் பறந்தன. 

kamaraj

‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என பல தொழிற்சாலைகளை உருவாக்கியவர் காமராஜர். 
தாகத்தால் தவித்த தமிழக மக்களின் தாகம் போக்க குமரி மாவட்டத்தில் மாத்தூர் தொட்டிப் பாலம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்,மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி நீரியல் மேலாண்மைக்கு வித்திட்டவர் காமராசர். இதுபோக கன்னியாகுமரி நெய்யாறு திட்டம், கோவை பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டம், பவானி அணை, மேட்டூர் அணை என வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் நீர்ப்பாசன திட்டங்களையும் ஆயிரத்து 600 ஏரிகளையும் வெட்டி, இன்றளவும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளின் பாசனத் திட்டங்களுக்கு முன்னோடித் தலைவராக இருப்பவரும், இருந்தவரும் காமராசர்தான். பிரதமர் பதவியை தமக்கு வேண்டாமெனத் தூக்கி எறிந்து லால் பகதூர் சாஸ்திரியையும், இந்திராவையும் பிரதமராக்கி கிங் மேக்கராக வலம் வந்த காமராசருக்கு வாரிசுகள் என யாரும் இல்லை. உலகத்திலேயே வேறு எந்த முதலமைச்சரும், ஒரு திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்குள் அந்த திட்டத்தை முடித்து விட்டு, மீதமிருக்கும் பணத்தை அரசாங்க கஜானாவில் சேர்த்ததில்லை. காமராஜரின் ஆட்சி காலத்தில் இந்த அதிசயமும் நிகழ்ந்தது. அணை கட்ட ஒதுக்கப்பட்ட தொகையில் மீதம் பிடித்து, அந்த பணத்தையும் அரசாங்க கஜானாவில் சேர்த்தார்.

kamaraj

சினிமா நட்சத்திரங்கள் புகழின் உச்சாணியில் இருந்த காலம் அது. சென்னை கோடம்பாக்கத்தின் மேம்பாலம் எல்லாம் இல்லாமல் ரயில்வே சிக்னலுக்காக மணி கணக்கில் நடிக, நடிகையர்கள் காத்திருந்தார்கள். ஒரு முறை காமராஜரிடம், ‘சிக்னலுக்காக காத்துக்கிட்டு இருக்கும் போது, கூட்டம் அதிகமாக கூடி விடுகிறது. ரசிகர்கள் சூழ்ந்துக் கொள்கிறார்கள். அங்கே ஒரு மேம்பாலம் கட்டினால் நல்லாயிருக்கும்’ என்று கோரிக்கை வைத்தார்கள் கலையுலகத்தினர்.
பொறுமையாக அவர்கள் சொல்வதைக் கேட்டு விட்டு, ‘நிறைய சம்பாதிக்கிறீர்கள்... உங்கள் தனிப்பட்ட வசதிக்காக மேம்பாலம் கட்டச் சொல்கிறீர்கள். நீங்கள் எல்லாம் சேர்ந்து ஏன், அங்கே மேம்பாலம் கட்டுவதற்கான செலவு தொகையை பங்கிட்டுக் கொள்ள கூடாது?’ என்று திருப்பி கேட்டார். அப்படி உருவானது தான் கோடம்பாக்கம் மேம்பாலம்.
இப்படியெல்லாம் வாழ்ந்த தலைவர் தான், தனது இறுதி காலத்தில் தனக்கென எதையும் சேர்க்காமல்,  4 கதர் வேட்டிகள், 4 கதர் சட்டைகள். அதிலும் ஒன்று கிழிந்தது, கையிருப்பாக 350 ரூபாய் ரொக்கப்பணத்துடன் இறந்தார்.

ttnnewsdesk Mon, 07/15/2019 - 12:51
Kamarajar birthday Unknown facts காமராஜர் தமிழகம்

English Title

unknown facts about karma veerar kamaraj

News Order

0

Ticker

0 
Couple impersonation

இந்நேரத்துக்கு கிரேசி மோகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்....?

வெவ்வேறு திசைகளில் வண்டி செல்வதையும், கணவரின் வண்டி ஓட்டும் ஸ்டைல் மாறுபடுவதையும் மனைவிமார்கள் கவனிக்க, மனைவியின் குரல் கர்ணகொடூரமா இருக்கும் இன்னிக்கி மட்டும் எப்புடி ஸ்வீட்டா இரு...

ரோடு போட்ட ரசீது இங்க இருக்கு, நீங்க போட்ட ரோடு எங்க இருக்கு?

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புதிய சாலை அமைப்பதற்காக ஆர்டர் போடப்பட்டு, வேலை வாங்கப்பட்டு, டெண்டர் தொகை வழங்கப்பட்டு, ரசீது வாங்கப்பட்டு, பலர் பாடுபட்டு அமைக்கப்பட்ட ரோடு மட்டும் காணோம். சாலை அமைக்கப்பட்டிருக்கிறது என எங்கே அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்களோ அங்கே பலகை மட்டுமே பல்லிளித்துக்கொண்டு இருக்கிறது. சாலையைக் காணோம்.

Board there, road where?

சாலை அமைத்ததற்கான தொகையாக அறிவிப்பில் இருப்பது 19 லட்சத்து 50ஆயிரம். எந்தெந்த அதிகாரிகளுக்கும் எந்தெந்த வட்டத்திற்கும் எவ்வளவு ஷேரோ? காமராஜபுரம் பகுதியில் சாலை என்றில்லை, எந்த அடிப்படை வசதியையும்கூட அதிகாரிகள் செய்து தருவதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.
 

gunaseelan Mon, 07/15/2019 - 12:09
Well missing comedy 20 Lakh worth Road missing Ramnad, Kadaladi Road missing க்ரைம் தமிழகம்

English Title

Officials jeopardize 19,50,000 worth Road construction

News Order

0

Ticker

1 

Cauvery, at Mekedatu

காவிரி, முல்லை பெரியாறு - ஒரே நேரத்தில் தமிழகத்துக்கு இரட்டை ஆபத்து!

மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்பட்டால், இதனை முன்னுதாரணம் காட்டி, கேரளாவும் வேலையைக் காட்டும். காவிரியில் மேகதாது என்றால், பெரியாரில் மஞ்சமலை. தமிழக அரசு சுதாரிக்க தவறினால், ஒரே கல்...

காமராஜர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

இன்று தமிழ், தமிழ் என்று வாய் கிழிய பேசுகிற அரசியல்வாதிகளுக்கு மத்தியில்,  உண்மையிலேயே மக்களுக்காக வாழ்ந்த தலைவர் காமராஜர். அவர் அப்படி வாழ்ந்ததினால் தான் ஐம்பது வருடங்கள் கழித்தும், மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக எல்லா கட்சியினரும், ‘காமராஜர் ஆட்சியைக் கொடுப்போம்’ என்று சொல்லி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு கேட்டு வருகிறார்கள்.

kamarajar


என்ன திட்டம் கொண்டு வருவதானாலும், அதனால் என் மக்களுக்கு என்ன பயன் என்று கேட்டு, அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்திய தலைவர் காமராஜர். தன் ஒரே மகனுக்கு கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்று காமராஜரின் தாயார் ஆசைப்பட்டார். அப்போதைய பல தலைவர்களும் கூட பலமுறை காமராஜரை திருமணம் செய்துக் கொள்ளும் படி வற்புறுத்தி வந்தார்கள். யாரிடமும் காரணம் சொல்லாமலே தன் திருமண விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து வந்தார் பெருந்தலைவர்.

kamarajar


அன்று பலரது மனத்திலும், வயசாகி கொண்டே போகிறதே... ஏன் காமராசர் இன்னும் திருமணம் செய்யவில்லை? என்கிற கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது. பொதுக்கூட்டங்களிலும் கூட, காமராஜர் பேசும் போது, அவர் மீதுள்ள அதீத அன்பால், மக்கள் அவரிடமே, ‘ஒரு கல்யாணம் பண்ணிக்கலாமில்லையா ஐயா?’ என்று கேட்டிருக்கிறார். ‘இப்ப அதுக்கு என்ன அவசரம்ணேன்’ என்று அப்போதைக்கு அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து வந்தார். பின் இந்தக் கேள்வியை அவரிடத்தில் கேட்க யாருக்கும் துணிவு வரவில்லை. ஒரு கட்டத்தில், எல்லோருமே அமைதியாகி விட்டனர். 
ஒரு முறை, இங்கிலாந்து ராணி காமராஜரிடம் நேரடியாக, ‘ஏன் நீங்கள் இதுவரையில் திருமணமே செய்துக் கொள்ளவில்லை’ என்று கேட்டார். அந்த கேள்வி இங்கிலாந்து ராணியிடம் இருந்து வந்த அடுத்த வினாடியே, கொஞ்சமும் யோசிக்காமல் காமராஜர் சொன்ன பதில் இங்கிலாந்து ராணியை மெய்சிலிர்க்க வைத்தது.

kamarajar


காமராஜர் சொன்ன பதில் இது தான்... 
‘நான் முதல்வர் ஆகி விட்டேன். ஆனால், இன்றும் என் ஆட்சியில் பல பெண்கள் திருமண வயதைத் தாண்டியும் அவர்களுடைய வறுமையின் காரணமாக திருமணமாகாமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் திருமணம் செய்துக் கொள்ளாமல் வறுமையில் இருக்கும் போது, நான் மட்டும் எப்படி திருமணம் செய்துக் கொள்ள முடியும். எங்கள் சமூகத்தில்  எப்போதுமே வீட்டில் தங்கைக்கு தான் முதலில் திருமணம் முடிக்கும் வழக்கம் உள்ளது. என் தங்கைகளுக்கெல்லாம் திருமணம் செய்யாமல் இருக்கும் போது, நான் எப்படி அதை மீறி திருமணம் செய்து கொள்வது?’ என்றார்.  நாட்டையே தன் வீடாக நினைக்கும் எண்ணம் இனி எந்த அரசியல்வாதிக்கு வருமோ?

manikkodimohan Mon, 07/15/2019 - 10:24
Kamarajar birthday Kamarajar marriage Kamarajar history காமராஜர் தமிழகம்

English Title

today kamarajar birthday: Kamarajar The Legend In Indian History

News Order

0

Ticker

0 
பிரேமலதா

டி.டி.வி.,யை தெறிக்கவிடும் எடப்பாடி... பிரேமலதாவை கதற விடும் மு.க.ஸ்டாலின்..!

அமமுகவை தொடர்ந்து தேமுதிக நிர்வாகிகளும் தொடர்ந்து மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருவது அக்கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஞானசேகரன்

அமமுகவில் விழுந்த மற்றொரு விக்கெட்: திமுகவில் இணைகிறார் ஞானசேகரன்

வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.


ஏ.சி.சண்முகம்

அதிமுகவை நம்பாத ஏ.சி.சண்முகம்... வேலூரில் பரபரக்கும் தேர்தல் களம்..!

இதனால் உஷாரான ஏ.சி.சண்முகம், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ’அவர் வேண்டாம். என் சார்பில் தேர்தல் பணிக்கு சிலரை பயன்படுத்திக் கொள்கிறேன்.
Mohammad Riyaz

நவீன அமுத சுரபி - பசியில்லா நெல்லை!

முதல்முயற்சி பெருவெற்றிப்பெறவே, மேலப்பாளையம் பஜார் திடலில் 2வது உணவு பெட்டகமும் திறந்துள்ளனர். விரைவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உணவு பெட்டகங்களைத் திறக்கவும் 'பசியில்லா நெல்...

2018 TopTamilNews. All rights reserved.