• March
    24
    Sunday

Main Area

Main



நடிகர் விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட 201 பேருக்கு 'கலைமாமணி' விருதுகள் அறிவிப்பு

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
Loading...

சென்னை: 2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழுவில் பரிந்துரைப்படி, இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற  பல்வேறு கலைப்பிரிவுகளில் புகழ்பெற்ற, திறமைமிக்க கலை வித்தகர்களுக்கு மாநில அளவில் மிக உயரிய விருதான “கலைமாமணி” விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கடைசியாக கடந்த 2010-ஆம் ஆண்டு மே மாதம் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு, கடந்த 6 ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், 2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட 201 பேர் இடம்பெற்றுள்ளனர்.

பட்டியலில், விஜய் சேதுபதி, கார்த்தி, சசிகுமார், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, சூரி, சந்தானம், பிரபுதேவா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் பெயர்களும், பி.ஆர்.வரலட்சுமி, பிரியாமணி, குட்டி பத்மினி, நளினி, சாரதா உள்ளிட்ட பல்வேறு நடிகைகளின் பெயர்களும், கானா உலகநாதன், கானா பாலா, உன்னி மேனன் உள்ளிட்ட பல்வேறு பின்னணிப் பாடகர்களின் பெயர்களும், சித்ரா லட்சுமணன், சுரேஷ் கிருஷ்ணா, ஹரி உள்ளிட்ட இயக்குனர்களின் பெயர்களும், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் பெயர்களும், ஏ.எம்.ரத்னம், கலைஞானம் உள்ளிட்ட தயாரிப்பாளர்களின் பெயர்களும், ஸ்டில்ஸ் ரவி, சேஷாத்ரி நாதன் சுகுமாரன் உள்ளிட்ட புகைப்படக் கலைஞர்களின் பெயர்கள் என  201 கலைவித்தகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அதுதவிர, கவிஞரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தனுக்கு பாரதி விருதும், பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.