வாட்ஸ் ஆப்பில் வரவிருக்கும் புதிய வசதி - undo, Edit வசதி விரைவில் அறிமுகம்

 
whatsapp

வாட்ஸ் ஆப்பில் புதிதாக undo மற்றும் எடிட் வசதியை கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஸமார்ட்போன் இல்லாமல் வாழும் மனிதர்களை பார்ப்பது அரிது. இதேபோல் ஸ்மார்போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தாத மனிதர்களை பார்க்க முடியாது. அந்த அளவிற்கு வாட்ஸ் ஆப்பின் தேவையும், பயன்பாடும் மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.  வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும்.  2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் ஆவர். இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர். உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.  பயனாளர்களை கவரும் நோக்கத்தில் வாட்ஸப் நிறுவனம் அவ்வபோது தனது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அனுப்பிய செய்திகளை அழிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.

whatsapp

இதன் மூலம் பயனாளர்கள் தவறுதலாக ஏதேனும் செய்தியை அனுப்பிவிட்டால் 'delete for me' அல்லது 'delete for everyone' என்னும் இரண்டு வசதிகளை பயன்படுத்தி அனுப்பிய செய்திகளை நீக்கி விடலாம். இந்த வசதி பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திய நிலையில், புதிய வசதி ஒன்றையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது 'delete for everyone' என்பதற்கு பதிலாக 'delete for me' கொடுத்து ஒரு குருஞ்செய்தியை அழித்துவிட்டால் மீண்டும் அதனை எடிட் செய்யும் வசதியை கொண்டுவரவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக undo வசதியை வாட்ஸப் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது இது சோதனை முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டதட்ட டெலிகிராமில் இருப்பது போல் பாப் அப் வசதியுடன் கூடிய undo வசதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 

எடிட் வசதியையும் அந்நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது செய்தியை அனுப்பிய பிறகு அதில் ஏதேனும் தவறு இருந்தால் , அதனை திருத்திக்கொள்ளும் எடிட் பட்டனும் இடம்பெறும் வகையில் புதிய அப்டேட் கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது. இவ்விரு புதிய வசதிகளும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.