அசத்தல்! அறிமுகமானது கூகுள் பிக்சல் 6a - இந்தியாவில் எப்போது விற்பனை ?

 
google pixal 6a

கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போர்ன் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இந்த வருட இறுதியில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூகுள் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். கூகுள் தேடுபொறி, இதன் முதன்மையான சேவை ஆகும். கூகுள் இணையத் தேடலுடன், கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் கூகுள் குரோம், கூகுள் சந்திப்பு, கூகுள் தொடர்புகள், கூகுள் செய்திகள், கூகுள் புகைப்படங்கள், கூகுள் டிரைவ், கூகுள் கோப்புகள், கூகுள் தாள்கள், கூகுள் விசைப்பலகை, கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. இந்நிலையில் சமீப காலமாக கூகுள், ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. இதுவரை கூகுள் பிக்சல், பிக்சல் 2, பிக்சல் 3, பிக்சல் 4, பிக்சல் 5, பிக்சல் 5a, உள்ளிட்ட மாடல்கள் வெளிவந்துள்ள நிலையில், கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  Google I/O - நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 28ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், இந்தியாவில் இந்த செல்போன் இந்த வருட இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில், 449 டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் 34 ஆயிரத்து 745 ரூபாய் ஆகும். 

google pixal 6a

கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வருமாறு:  6.1 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே, கூகுள் டென்சார் சிப்செட், டைட்டன் M2 செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.  இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்.,  உள்ள நிலையில், மூன்று ஆண்டுகள் ஓ.எஸ். அப்டேட் மற்றும் ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது.ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 12.2MP பிரைமரி கேமரா மற்றும்,12MP அல்ட்ரா வைடு கேமரா  என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் முன்பக்கத்தில் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 4306mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 18W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 6GB ரேம் கொண்ட இந்த செல்போனில், 128GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 2 மைக்ரோபோன்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதேபோல் நெட்வொர்க்கை பொறுத்தவரையில், 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 LE, GPS
- யு.எஸ்.பி டைப் சி 3.1
 உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் சார்கோல், சால்க் மற்றும் சேஜ் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களுக்கான டீசரையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.