இந்தியாவில் ஜூலை மாதத்தில் 23.87 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

 
whatsapp ban

தகவல் தொழில்நுட்ப விதிமீறல்களுக்காக, இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 23.87 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும்.  2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் ஆவர். இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர். உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.  

whatsapp

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வெறுப்புணா்வை தூண்டும் பேச்சுகள், தவறான தகவல்கள், பொய் செய்திகள் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கடுமையான விதிமுறைகள் மத்திய அரசால் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டன. அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் விதிமீறல்களுக்காக 23.87 லட்சம் இந்திய வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 22 லட்சம் கணக்குகளும், மே மாதம் 19 லட்சம் கணக்குகளும், ஏப்ரலில் 16 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.