அசத்தல் அறிவிப்பு! Redmi K50i 5G விரைவில் அறிமுகம்

 
redmi k50i 5g

ரெட்மி விரைவில் கே சீரிஸ் ஸ்மார்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது  Redmi K50i 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
 
ரெட்மி, சியோமி நிறுவனத்தை தாய் நிறுவனமாக கொண்ட ஒரு எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் செல்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், வாட்சுகள், ஃபிட் பேண்டுகள், இயர் பேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு விதமான எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறது. குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரெட்மி நிறுவனத்தின் பொருட்களுக்கென இந்தியாவில் மிகப்பெரிய சந்தை உள்ளது. செல்போன் விற்பனையில் இந்தியாவில் முன்னணியில் உள்ள ரெட்மி நிறுவனம் அவ்வபோது புதிய புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கே சீரிஸில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.  "ரெட்மி கே இஸ்பேக்" என்று மேற்கோள் காட்டி ரெட்மி நிறுவனம் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது. Redmi K50i என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்போன், ஏற்கனவே மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 11T Pro-வின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக வர உள்ளதாக கூறப்படுகிறது. .

redmi k50i 5g

இதனிடையே Redmi K50i ஸ்மார்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன. அதாவது 6.6-இன்ச் முழு-HD+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 144Hz புதுப்பிப்பு விகிதம் மற்றும் டால்பி விஷன் ஆதரவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் MediaTek Dimensity 8100 SoC உடன் வெளியாகிறது. இந்த செல்போனின் பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட இரண்டாம் நிலை கேமராக்கள் என மொத்தம் 3 கேமராக்கள் உள்ளன. இதேபோல் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 8GB ரேம் உடன் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 128 ஜிபி இண்டர்னெல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. 5080mAh பேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்போன் 200 கிராம் எடை கொண்டதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.