வாட்ஸ் ஆப்பில் வந்தாச்சு undo வசதி - இனிமேல் அழித்த செய்தியை திரும்ப பெறலாம்!

 
whatsapp

வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது அழித்த செய்தியை மீண்டும் திரும்பபெரும் வகையில் 'undo'வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும்.  2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது.  இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர். உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

whatsapp

இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது அழித்த செய்தியை மீண்டும் திரும்பபெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தவறுதலாக அனுப்பப்பட்ட செய்தியை நீக்கும் அவசரத்தில், "delete for everyone"க்கு பதிலாக "delete for me"ஐ  தற்செயலாக அழுத்திவிட்டால், அந்த செய்தியை நீங்கள் பார்க்கவோ அல்லது நீக்கவோ முடியாது, ஆனால் நீங்கள் அனுப்பிய செய்தி மற்றவர்களுக்கு அது தெரியும்.  இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்க வாட்ஸ்அப் புதிய “undo” வசதியை வெளியிட்டுள்ளது. "delete for me" கொடுத்து அழிக்கப்பட்ட பிறகு, ஐந்து நொடிகளில் 'undo' திரையில் தோன்றும் . 'undo' பொத்தானைக் கிளிக் செய்தால், நீங்கள் நீக்கிய செய்தி மீண்டும் தோன்றும், அந்த செய்தியை திரும்பபெற்ற பின் , "delete for everyone" விருப்பத்தை தேர்வு செய்யலாம். இந்த வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.