வாட்ஸ் ஆப்பில் வந்துள்ள புதிய வசதி - இனி குரூப்பில் 1024 உறுப்பினர்கள் வரை சேர்க்கலாம்

 
whatsapp

வாட்ஸ் ஆப் நிறுவனம் குரூப் பயனர்களின் எண்ணிக்கையை 1024 ஆக அதிகரித்துள்ளது. 

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும்.  2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது.  இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர். உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதுப்புது வசதிகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

whatsapp

இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் குரூப் பயனர்களின் எண்ணிக்கையை 1024 ஆக அதிகரித்துள்ளது. இந்தப் புதுப்பித்தலுக்குப் பிறகு, வாட்ஸ்அப் க்ரூப்பில் 1024 உறுப்பினர்களைச் சேர்க்க முடியும். முன்னதாக ஜூன் மாத வாக்கில் வாட்ஸ்அப் குரூப் பயனர்கள் எண்ணிக்கை 512 ஆக அதிகரிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் குரூப்களில் அதிகபட்சமாக 1024 பேரை இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது வாட்ஸ்அப் குரூப்-இல் எத்தனை பேரை சேர்த்துக் கொள்ள முடியும் என பார்க்கலாம். இந்த அம்சத்துடன் Pending Participants பெயரில் மற்றொரு வசதியை வழங்கி இருக்கிறது. இதில் குரூப் அட்மின்கள் எத்தனை பேர் குரூப்-இல் உள்ளனர் என்பதை பார்க்க வழி செய்கிறது. இவர்களை அட்மின்கள் எப்போது வேண்டுமானாலும் அங்கீகரிக்கலாம். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.