6,000mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங்.... அறிமுகமானது விவோ Y 73T 5G

 
Vivo y73t

விவோ Y 73T 5G ஸ்மார்ட்போன் சீனாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. 

விவோ சீனாவின் டாங்குவான் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சர்வதேச தொழில்நுட்ப மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது விவோ நிறுவனம் உலகம் முழுவதும் தனது சந்தையை விரிவுபடுத்தியுள்ளது.  விவோ ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளன. இந்திய சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் விவோ நிறுவனம், அவ்வபோது புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் விவோ நிறுவனம் நேற்று சீனாவில் விவோ Y 73T 5G என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில்  மூன்று வேரியண்டுகள் உள்ளன. அதாவது 8GB RAM + 128GB storage, 8GB RAM + 256GB storage, மற்றும் 12GB RAM + 256GB storage ஆகும். இதேபோல் இந்த வேரியண்டுகளின் விலை, 16,000 ரூபாய், 18,500 ரூபாய் மற்றும் 21,000 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Vivo y73t

விவோ Y 73T 5G சிறப்பம்சங்கள்:

6.58 inch full-HD + LCD screen கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 60Hz refresh rate கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் MediaTek   Dimensity 700 SoC மற்றும் Android 11 தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுப்பதற்காக 50 மெகாபிசல் பிரைமரி கேமராவும், செல்ஃபி எடுக்க 8 மெகாபிக்சல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 6000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதோடு, 44W ஃபாஸ்ட் சார்ஜின் வசதியும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Autumn, Fog Blue மற்றும் Mirror Black ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.