ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் - விலை மற்றும் பிற விவரங்கள் இதோ!!

 
tn

ஆப்பிள் நிறுவனம்  ஐபோன்-15 சீரிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. 

tn

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் சீரிஸ்களை அறிமுகப்படுத்துவது வழக்கம்.  அந்த வகையில் இந்த ஆண்டு ஐபோன் 15 சீரிசை அறிமுகப்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் ஐபோன் 15,  ஐபோன் 15 பிளஸ் ஆகிய புதிய ஆப்பிள் ரக செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மஞ்சள்,  பிங்க் என ஆறு வண்ணங்களில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதில் 5 ஜி நெட்வொர்க்,  சாட்டிலைட் துணையுடன் ரோட் சைட் அசிஸ்டன்ட் வசதி மற்றும் 26 மணி நேரம் பேட்டரி பவர்,  உயர்செறிவுத்திறன் கொண்ட ஓஎல்இடி டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் யூஎஸ்பிசி டைப் சார்ஜர் , கேபிள் வசதியும் முதல்முறையாக கொடுக்கப்பட்டுள்ளது.

tn

48 மெகாபிக்சல் கொண்ட  கேமரா  உள்ளது. அத்துடன்  ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.ஐபோன் 15-ன் ஆரம்ப விலை ரூ. 79,900, ஐபோன் 15 ப்ளஸின் ஆரம்ப விலைரூ.89,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 15 ப்ரோவின் ஆரம்ப விலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 எனவும், ஐபோன் 15 மேக்ஸ் ப்ரோவின் ஆரம்ப விலை 1 லட்சத்து 59 ஆயிரத்து 900 ரூபாய் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது