கூகுள் குரோம் பிரவுஸருக்குள் நுழைந்த ஹேக்கர்கள்... உடனே இதை செய்ங்க - எச்சரிக்கும் அரசு!

 
google chrome

உலகம் முழுவதும் கணினி, ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் பிரவுஸர் சாய்ஸில் முதலிடம் பிடிப்பது கூகுள் குரோம் (Google Chrome) தான். அதற்கு அடுத்தப்படியாக தான் மொசில்லா ஃபயர்பாக்ஸ், ஓபிரா போன்ற பிரவுஸர்கள் பயனர்களின் விருப்பத் தேர்வில் இருக்கின்றன. இந்தியாவில் சொல்லவே வேண்டாம் நூற்றுக்கு 90% பேர் கூகுள் குரோம் தான் பயன்படுத்துவார்கள். இந்த கூகுள் குரோமில் தான் இப்போது ஆபத்து வந்துள்ளது. 

Update your Google Chrome NOW – tech giant warns over dangerous bug 'that  lets hackers hijack your computer'

ஆம் கணினியில் பழைய கூகுள் குரோமில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக சைபர் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஹேக்கர்கள் கூகுள் குரோம் வழியாக உங்கள் கணினிக்குள் நுழைகின்றனர். உங்கள் தகவல்களையும் திருடிகின்றனர். மேலும் நீங்கள் அன்றாடம் கணினியில் என்ன செய்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்க மால்வேர் எனப்படும் ஆபத்தான மென்பொருளையும் நிறுவுகிறார்கள். உங்களது விவரங்களைத் திருடிய பிறகு, அவர்கள் அதனை வெளியிட வேண்டாமென்றால் பணம் கேட்கவும் வாய்ப்புள்ளது.

Google Chrome issues urgent warning to update browser as it's revealed 25  new threats discovered in past two weeks

ஆகவே பழைய வெர்சன் கூகுள் குரோம் வைத்திருப்பவர்கள் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய ஐடி துறையின் கீழ் செயல்படும் இந்திய கணினி பாதுகாப்பு குழு (CERT-In) இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பழைய அப்டேட்டிக் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை கூகுள் தற்போது சரிசெய்துவிட்டதாகவும், ஆகவே அனைவரும் பழைய வெர்சனை ஓரங்கட்டிவிட்டு புதிய வெர்சனை அப்டேட் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீங்கள் பழைய வெர்சன் வைத்திருந்தால் உடனே கூகுள் குரோமின் புதிய வெர்சன் 96.0.4664.93. என்பதற்கு அப்டேட் செய்யுங்கள்.

How to Update Google Chrome

கூகுள் குரோமின் முகப்பு பக்கத்தில் ஓரத்தில் உள்ள மூன்று புள்ளிகளை (:) கிளிக் செய்து Help - About Google Chrome என்ற ஆப்சனுக்குள் செல்ல வேண்டும். அதை கிளிக் செய்தால் உங்களின் கூகுள் குரோம் புதிய வெர்சனுக்கு தானாகவே அப்டேட் ஆகிவிடும். அதில் 96.0.4664.93 என்ற புதிய வெர்சனின் எண் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் அப்டேட் என்ற ஆப்சனை கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். இதுவும் வொர்க்-அவுட் ஆகவில்லை என்றால், பழைய குரோமை அன்-இன்ஸ்டால் செய்துவிட்டு, இணையத்தில் புதிய குரோமை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.