விரைவில் அறிமுகமாகிறது iQoo Z7 - டீசரை வெளியிட்ட நிறுவனம்

 
iqoo z7

iQoo Z7 ஸ்மார்ட்போனை ஐகூ நிறுவனம் விரைவில் வெளியிட உள்ள நிலையில், அது தொடர்பான டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

iQoo சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2019ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் விவோ ஆகும். இந்தியாவில் தற்போது iQoo  தனக்கென்று தனி அடையாளத்தை பிடித்துள்ளது.. iQoo செல்போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இதேபோல் இந்த நிறுவனம் ஏராளமான வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது. iQoo செல்போன்களில் இதுவரை ஏராளமான மாடல்கள் வந்துள்ள நிலையில், புதிய iQoo Z சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 


இந்த தகவலை iQoo இந்திய தலைமை செயல் அதிகாரி நிபுன் மர்யா உறுதிபடுத்தியுள்ளார். அவர் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் அடங்கிய டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டீசரில் புதிய ஐகூ ஸ்மார்ட்போன் பெயர் விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், படத்தில் உள்ள ஸ்மார்ட்போனின் பின்புறம் Z7 என எழுதப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ Z6 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் இது என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் iQoo Z7 ஸ்மார்ட்போனை எதிர்ப்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 
 

News Hub