அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமானது itel S23 ஸ்மார்ட்போன் - முழு விவரம் இதோ!

 
 itel S23

அசத்தலான அம்சங்களுடன் itel S23 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் வருகிற 14ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறாது.

itel சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் ஆகும். itel ஸ்மார்ட்போன் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைமையிடம் சீனாவின் சின்சேன் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில், itel நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய S23 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 14 ஆம் தேதி அமேசான் தளத்தில் தொடங்குகிறது. இதன் விலை 8 ஆயிரத்து 799 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டள்ளது. இதன் 4 ஜிபி ரேம் வேரியண்ட் ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் கிடைக்கும் என itel நிறுவனம் தெரிவித்துள்ளது.

 itel S23

itel S23 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :

6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. யுனிசாக் T606 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 உள்ளிட்ட வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனை யுஎஸ்பி டைப் சி போர்ட் மூலம் சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டேரி பிளாக் மற்றும் மிஸ்ட்ரி வைட் நிறங்களில் கிடைக்கிறது.  

News Hub