சிறப்பான அம்சங்களுடன் மோட்டோ G14! ஆகஸ்ட் 01ம் தேதி இந்தியாவில் அறிமுகம்!
மோட்டோ G14 ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என மோட்டோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட நிறுவனமான மோட்டோரோலா, எலக்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனம் மோட்டோ என்ற பெயரில் செல்போன்களை விற்பனை செய்து வருகிறது. உலக அளவில் செல்போன்களுக்கு பெரிய சந்தையை கொண்டுள்ள மோட்டோ இந்தியாவிலும் ஏராளமான வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது. இதுவரை ஏராளமான மாடல்கள் வந்துள்ள நிலையில், அந்நிறுவனம் புதிய மோட்டோ G14 ஸ்மார்ட்போனை வருகிற ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பிளிப்கார்ட் வலைதளத்தில் புக்கிங் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புளூ மற்றும் கிரே நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது.

மோட்டோ G14 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :
மோட்டோ G14 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. யுனிசாக் T616 பிராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. 4GB RAM மற்றும் 128GB மெம்மரி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 தொழில்நுட்பத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. மேலும் ஆன்ட்ராய்டு 14 அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மேக்ரோ கேமரா, நைட் விஷன் சப்போர்ட் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனிற்கு 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிற பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.


