புதிய அம்சங்களுடன் வாரம் ஒரு அப்டேட் என அசத்தும் வாட்ஸ் அப்..

 
புதிய அம்சங்களுடன்  வாரம் ஒரு அப்டேட் என அசத்தும் வாட்ஸ் அப்..

32 பேருக்கு வாய்ஸ் கால், டைரக்ட் மெசேஜ், குரூப் அட்மினுக்கு கூடுதல் சலுகைகள்   உள்ளிட்ட பல்வேறு  புதிய வசதிகளை வாட்ஸப் அறிமுகம் செய்ய உள்ளது.  

இன்று உலக அளவில்  அதிக மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலியாகவும்,  ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள பேருதவியாகவும் இருந்து வரும் செயலி வாட்ஸ்-அப்.  மெட்டா நிறுவனத்தின் இந்த செயலி மூலம்  டெக்ஸ்ட், வாய்ஸ் உரையாடல்கள், வீடியோ, ஆடியோ கால் செய்யும் வதிகள்  உள்ளன. அத்துடன்   புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும்  டாக்குமெண்ட்ஸ் போன்ற  ஃபைல்களையும் இதில் அனுப்பிக் கொள்ளலாம்.  

புதிய அம்சங்களுடன்  வாரம் ஒரு அப்டேட் என அசத்தும் வாட்ஸ் அப்..

அவ்வாறு  அனுப்பும் அந்த ஃபைல்கள்  ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் (Size) இருந்தால் மட்டுமே இதுவரை அனுப்ப முடியும்.  இதனால் அதிக அளவு கொண்ட  ஃபைல்களை அனுப்ப பயனகள் தனியாக வேறு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்தது.  இதனை நிவர்த்தி செய்யுமாறு பயனர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய அப்டேட்டுகளை வாட்ஸ் அப் அறிவித்திருக்கிறது.

whatsapp

அதில் முக்கியமான ஒன்றாக,  இனி  2ஜிபி வரையிலான ஃபைல்களை அனுப்பக்கூடிய  அளவிற்கு வாட்ஸ அப்  அப்டேட் செயப்பட்டுள்ளது.  மேலும் வாட்ஸ் அப் செயலியில்  அறிமுகம் இல்லாதவரின் மொபைல் எண்ணை சேவ் செய்யாமலேயே அந்த நபருக்கு ‘டைரக்ட் மெசேஜ்’ செய்யும் புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  அதேபோல் மெசேஜ்களுக்கு  ரியாக்சனை வெளிப்படுத்த, பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பதை போன்று எமோஜி வசதியையும் வாட்ஸ் அப் அறிமுகம் செய்கிறது.   

வாட்ஸ் அப் குரூப்பில் எந்த நபரும் பதிவிடும் தேவையற்ற  தகவலை  நீக்குவதற்கு  அதன் அட்மினுக்கு அனுமதி அளிக்கும்   வசதியும்  அறிமுகமாகிறது.  அதேபோல்  வாட்ஸ் அப் குரூப் வாய்ஸ் காலில் 32 பேர் வரை பங்கேற்கும் வசதியும்,  பல வாட்ஸ் அப் குரூப்களை கையாளும் வசதியும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.