#Rewind2021: இளசுகளை சுண்டியிழுத்த இன்ஸ்டா ரீல்ஸ்... டெலிகிராமுக்கு அடித்த ஜாக்பாட்... எகிறிய ஜூம் மார்க்கெட்...எங்கும் ஸ்பாட்டிஃபை வைப்ஸ்!

 
ரீவைண்ட்

நீரின்றி அமையாது உலகம் என்பது மருவி ஆப்பின்றி (App) அமையாது உலகு என்றாகிவிட்டது. உலகம் தகவல் தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. நொடிப்பொழுதில் இங்கே இருந்துகொண்டு உலகின் எந்தவொரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக பார்க்க முடிகிறது. குறிப்பாக கைக்குள் சுருங்கிவிட்டது உலகம். ஆப்கள் நம்முடைய வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் 2021ஆம் ஆண்டில் அதிகமான டவுன்லோட் செய்யப்பட்ட ஆப்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனை இங்கே பார்ப்போம். 

ரீவைண்ட்

எப்பவுமே நாங்க டாப்பு தான்!

உலகளவில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகளில் டாப் நம்பர் 1இல் இருப்பது டிக்டாக் தான். 65.6 கோடி மக்கள் டிக்டாக் செயலியை பதவிறக்கம் செய்துள்ளனர். இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டது. தடை செய்யப்படாவிட்டால் நிச்சயமாக இன்னும் சில கோடிகள் ஏறியிருக்கும். டிக்டாக்கை பொறுத்தவரை திறமைகளை காட்டும் தளமாக அமைந்துள்ளது. அதேபோல தற்போது ஆன்லைன் வியாபாரமும் கொடிகட்டு பறக்கிறது. இதனால் மக்களிம் நல்ல பிரபலமான ஆப்பாக மாறிவிட்டது. 

TikTok dethrones Google as this year's most popular domain - CNET

இளசுகளை கட்டியிழுத்த இன்ஸ்டா ரீல்ஸ்!

டிக்டாக்கை ஓவர்டேக் செய்யும் வகையில் இன்ஸ்டாகிராம் களமிறக்கியது தான் ரீல்ஸ். டிக்டாக் போல இல்லாமல் அதிகப்படியான ஆப்சனுடன் ரீல்ஸும் சேர்ந்துகொண்டதால் இளைஞர்களிடையே அதன் மீதான மோகம் அதிகரித்தது. உண்மையைச் சொல்லப்போனால் ரீல்ஸ் வந்த பிறகே இன்ஸ்டாகிராமின் மார்க்கெட் எகிறியது. உலகம் முழுவதும் 54.5 கோடி மக்கள் இன்ஸ்டாகிராமை டவுன்லோட் செய்திருக்கிறார்கள்.

Instagram Reels: What to Know About Facebook's TikTok Clone in US

நெட்டிசன்களில் GOAT-ஆன பேஸ்புக்!

Greatest Of All Time (GOAT) என்ற பதம் உண்டு. அனைத்து காலங்களில் இதை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. அப்படியே போட்டிக்கு வந்தாலும் இது தான் கிரேட் என்பார்கள். அந்த வகையில் ஆப்களில் பேஸ்புக் தான் GOAT. எத்தனை செயலிகள் வந்தாலும் சரி போனாலும் சரி நிலைத்து நிற்பது பேஸ்புக் தான். மிக முக்கியமான வியாபார தளமாக மாறியிருக்கிறது பேஸ்புக். இதனால் அதிகப்படியான மக்கள் டவுன்லோட் செய்து காசும் பார்க்கிறார்கள். இளசுகளின் மிக முக்கிய டேட்டிங் தளமாகவும் செயல்படுகிறது. உலகம் முழுவதும் 41.6 கோடி மக்களால் டவுன்லோட் செய்யப்பட்டிருக்கிறது.

15 Hidden Facebook Features Only Power Users Know | PCMag

புது புது ஆப்சன்களால் கவர்ந்திழுத்த வாட்ஸ்அப்!

பேஸ்புக், இன்ஸ்டா போன்றவை அந்நியர்களுடனான உரையாடல்களுக்கு பெயர் போனது. ஆனால் ஃபர்சனலாக நாம் சாட் செய்ய ஒரு செயலி தேவை அல்லவா? அதை தான் வாட்ஸ்அப் பூர்த்தி செய்தது. டெலிகிராம் போன்ற பல்வேறு செயலிகள் போட்டிக்கு வந்தாலும் வாட்ஸ்அப் தான் டாப்பில் இருக்கிறது. அதற்கேற்ப வாட்ஸ்அப் பே, வீடியோ கால்களில் அதிகமான அம்சங்கள், ஒரு முறை மட்டுமே பார்க்கக் கூடிய புகைப்படம், வீடியோக்கள் அனுப்புவது என பல்வேறு அம்சங்கள் கொடுக்கப்பட்டன. 39.5 கோடி பேரால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.

How to Check Your WhatsApp Number

டெலிகிராமுக்கு அடித்த ஜாக்பாட்!

வாட்ஸ்அப் வியாபாரம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் அது தனியுரிமை கொள்கை (Privacy Policy) மாற்றும் வரை தான் நீடித்தது. பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை பேஸ்புக் போன்ற மூன்றாம் தர பார்ட்டிகளுக்கு வாட்ஸ்அப் பகிர்ந்துகொள்ள போவதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இதனால் தங்கள் பிரைவசி பாதிக்கப்படும் என நினைத்த கோடிக்கணக்கான பயனர்கள் டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கு தாவினர். டெலிகிராமே நிறைய பேரின் சாய்ஸாக இருந்தது. 32.9 கோடி பேரால் டவுன்லோச் செய்யப்பட்டு வாட்ஸ்அப்புக்கு நிகராக வளர்ந்து நிற்கிறது.

Telegram is rolling out its Sponsored Messages feature: Here is what it  means | Technology News,The Indian Express

ஃபில்ட்டர்களாள் கொடிகட்டி பறக்கும் ஸ்னாப் சாட்!

பேஸ்புக் ஸ்டோரி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள்? அவற்றுக்கு பிள்ளையார் சுழி போட்டது யார் தெரியுமா? சாட்சாத் ஸ்னாப் சாட் தான். ஸ்டோரி டைப்பை அறிமுகப்படுத்தி நெட்டிசன்களிடையே பிரபலமான ஸ்னாப் சாட் ஃபில்ட்டர்களுக்கு பெயர் போனது. கேமராவின் ஃபில்ட்டர்களுக்காகவே ஸ்னாப்சாட்டை பயன்படுத்துபவர்கள் அதிகம். இதன்மூலம் பூனை போலவோ, முயல் போலவோ முகத்தை மாற்றி நண்பர்களுடன் பகிர்ந்து ஜாலியாக இருக்கலாம். 32.7 கோடி பேரால் டவுன்லோட் செய்யப்பட்டிருக்கிறது.

How World Leaders use Snapchat - Twiplomacy

கொரோனா பரவலில் கைகொடுத்த ஜூம்!

கொரோனா பரவலால் உலகப் பொருளாதாரம் வீழ்ந்தது. ஆனால் ஜூம் செயலியின் மார்க்கெட் பல மடங்கு எகிறியது. ஏனென்றால் கடுமையான ஊரடங்கால் மக்கள் யாரும் வெளியில் செல்ல முடியவில்லை. நண்பர்களைச் சந்திக்க முடியவில்லை. நேரடி வகுப்பு பள்ளி, கல்லூரிகளில் செயல்படவில்லை. ஆனால் இந்த ஏக்கங்களை எல்லாம் தீர்த்தது ஜூம் எனும் வீடியோ கால் ஆப் தான். 30 கோடி பேர் ஜூம் செயலியை டவுன்லோட் செய்திருக்கிறார்கள்.

How to Set Up a Zoom Meeting

இளைஞர்களின் ஆல்டைம் ஃபேவரைட் டேட்டிங் மெசெஞ்சர்!

நிறைய டேட்டிங் சைட்கள் உள்ளன. டேட்டிங் செயலிகள் உள்ளன. ஆனால் பேஸ்புக்குக்கு எப்போதுமே தனி மவுசு தான். ஏனெனில் ஸ்டேட்டஸ்கள், ஸ்டோரிகளை போட்டு இளைஞர்கள் இளைஞிகளையும் இளைஞிகள் இளைஞர்களையும் கவர முடியும். அப்படி கவர்ந்த பின் அவர்கள் காதலை வளர்த்தெடுக்கும் வேலையை மெசெஞ்சர் தான் செய்கிறது. அதனால் தான் அது ஆல்டைம் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கிறது. 26.8 கோடி பேரால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.

Download Facebook Messenger 2022 APK for Android - Messengerize

டிக்டாக்கால் எகிறும் கேப்கட் மார்க்கெட்!

டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றலாம். ஆனால் அதற்கு முன்னர் மிகச் சரியாக எடிட் செய்து பார்வையாளர்களை மயக்கும் வண்ணம் அப்லோட் செய்ய வேண்டும் என பலரும் நினைப்பார்கள். அவர்களுக்கான வரப்பிரசாதம் தான் CapCut. ஃபர்பெக்ட்டாக டிக்டாக்கில் வீடியோ அப்லோட் செய்ய வீடியோவை இச்செயலியின் மூலம் எடிட் செய்ய முடியும். 25.5 கோடி பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

CapCut Review | PCMag

இசைக்கு மயங்காத உயிர் உண்டோ... எங்கும் ஸ்பாட்டிஃபை வைப்ஸ்!

மனிதர்களின் வாழ்வில் இசை என்பது இன்றியமையாத ஒன்று. சோகத்தில் இருந்தால், மகிழ்ச்சியில் இருந்தால் என மனிதனின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஏற்றவாறு இசைகளும் பாடல்களும் கொட்டிக் கிடக்கின்றன. முன்பெல்லாம் ஆன்லைனில் டவுன்லோட் செய்து ஆப்லைனில் கேட்போம். அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் ஆன்லைன்லியே பாடல்கள், இசையை கேட்கும் விதமாக பல்வேறு ஆப்கள் களமிறங்கிவிட்டன. அமேசான் மியூஸிக், ரெஸ்ஸோ, யூடியூப் மியூஸிக் என பல இருந்தாலும் ஸ்பாட்டிஃபை தான் முதலிடத்தில் இருக்கிறது. உலகளவில் 20 கோடி பேர் டவுன்லோட் செய்திருக்கிறார்கள்.  

Spotify's new feature will make it easier to block others | Technology  News,The Indian Express