Samsung M14 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு எப்போது? - வெளியானது அறிவிப்பு!

 
raja

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M14 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

சாம்சங், தென் கொரியாவை சேர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இந்தியாவில் சாம்சங் செல்போன்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதேபோல் சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக சந்தையை கொண்டுள்ளது. அவ்வபோது புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தி வரும் சாம்சங் நிறுவனம் தற்போது, கேலக்ஸி M14 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி M14 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி M14 விலை ரூ. 13 ஆயிரத்து 499 அல்லது ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

samsung m14

சாம்சங் கேலக்ஸி M14 சிறப்பம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 13 வித்தியாசமான 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.  இத்துடன் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட எக்சைனோஸ் 1330 பிராசஸர் வழங்கப்படுகிறது. கேலக்ஸி F14 5ஜி மாடலை தொடர்ந்து இந்த பிரிவில் எக்சைனோஸ் 1330 பிராசஸர் கொண்ட இரண்டாவது ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கேலக்ஸி M14 பெற்று இருக்கிறது.  50MP பிரைமரி கேமராவுடன், மூன்று லென்ஸ்கள் வழங்கப்படுகின்றன.  6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 155 மணி நேரத்திற்கு ஆடியோ பிளேபேக், 58 மணி நேரத்திற்கு டாக்டைம், 27 மணி நேரத்திற்கு இணைய பயன்பாடு, 25 மணி நேர வீடியோ பிளேபேக் வழங்குகிறது.