கம்மியான விலையில் tecno spark 8p ஸ்மார்ட்போன்

 
tecno spark 8p

tecno spark 8p ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதை முன்னிட்டு அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. 

டெக்னோ சீனாவின் சேன்சேனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் tecno spark 8p ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்யவுள்ளது. இந்த நிலையில் tecno spark 8p ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இரண்டு வேரியண்டுகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டர்னெல் ஸ்டோரேஜ் உடன் ஒரு வேரியண்டும், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இண்டர்னெல் ஸ்டோரேஜ் உடன் ஒரு வேரியண்டும் வெளியாகவுள்ளது. 

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இண்டர்னெல் ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போனின் விலை 10.999 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் தொடுதிரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 11 தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனிற்கு 18W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.