அசத்தலான சிறப்பம்சங்கள் ! மலிவான விலை ! tecno spark 9 இன்று அறிமுகம்

 
tecno spark 9

tecno spark 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதை முன்னிட்டு அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. 

டெக்னோ சீனாவின் சேன்சேனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்  tecno spark 8p ஸ்மார்ட்போனை அந்த நிறுவனம் வெளியிட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இன்று tecno spark 9 ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. 

tecno spark 9

11 ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 128 ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. 11 ஜிபி ரேமில் 6 ஜிபி ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கும் எனவும், 5 ஜிபி வரை அதிகரித்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6.6 இன்ச் ஹெச்டி தொடுதிரை கொண்ட இந்த செல்போனில் 90Hz புதுப்பித்தல் விகிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்னில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. கேமராக்கள் பற்றிய தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. பல்வேறு அசத்தலான அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மாரட்போன் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையிலேயே அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.