ஸ்டீயரிங்கே கிடையாது! முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக்... டெஸ்லா அசத்தல்
ஸ்டீயரிங், பிரேக், ஆக்சிலரேட்டர் இல்லாத டெஸ்லா தானியங்கி பேருந்து டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தினார்.
ஓட்டுநரே இல்லாமல் முழுக்க முழுக்க தானாகவே இயங்கும் ரோபோ பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் ஸ்டீயரிங், பிரேக் பெடல், ஆக்சிலரேட்டர் என வாகனங்களில் இருக்கும் எந்த பாகங்களும் இல்லை. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனமே இந்த ஸ்மார்ட் பேருந்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் நடந்த “வீ ரோபோட்” நிகழ்வில் டெஸ்லா நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில், ரோபோ பேருந்தும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இதே நிகழ்வில் சைபர்கேப் எனப்படும் மற்றொரு தானியங்கி காரும் அறிமுகப்படுத்தப்பட்டது.
Optimus is your personal R2D2 / C3PO, but better
— Tesla (@Tesla) October 11, 2024
It will also transform physical labor in industrial settings pic.twitter.com/iCET3a9pd8
ரோபோ பேருந்தில் 20 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம். ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த எலெக்ட்ரிக் பேருந்து இயங்குகிறது. பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமின்றி, சரக்கு போக்குவரத்துக்கும் இந்த பேருந்தை பயன்படுத்தலாம். மனிதர்களால் இயக்கப்படும் வாகனத்தை விட, இந்த வாகனம் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 2026ல் இதன் உற்பத்தி தொடங்கலாம் என்றும் விலை உத்தேசமாக 30 ஆயிரம் டாலர்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.