Main Area

Main

தல அஜித்துடன் மோதும் சிம்பு?

strajith

சென்னை: தல அஜித்தின் தீவிர ரசிகரான நடிகர் சிம்பு, அவருடன் நேரடியாக மோதவிருப்பதாக தெரிகிறது.

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படமும் சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு பாக்ஸ் ஆபீஸில் கடும் மோதல் இருக்கும் என கூறப்படுகிறது.

சூப்பர் ஹிட்டான ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘அத்தரிண்டிக்கி தாரிடி’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசானது.

மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் சிம்பு பேசிய ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற வசனத்தையே சுந்தர்.சி இயக்கும் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர். இதனால் சிம்பு ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படமும் சிம்புவின் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ திரைப்படமும் நேரடியாக மோதவுள்ளன. இத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால் வரும் பொங்கல் பண்டிகை களைக்கட்டும் என தெரிகிறது.

2018 TopTamilNews. All rights reserved.