ஈரக் கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட 9ம் வகுப்பு மாணவி மின்சாரம் தாக்கி பலி

 
ச் ச்

ஈர கையுடன் செல்போன் சார்ஜ் போடும் பொழுது மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை எர்ணாவூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முகுந்தன். இவருடைய மனைவி விஜயா. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு அனிதா(14), எழில்மதி (7) என இரு மகள்கள் உள்ளனர். இவருடைய மூத்த மகள் அனிதா(14) எண்ணூர் கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று மாலை அனிதா வீட்டில்  இருந்த போது ஈரக் கையுடன்  செல்போனை சார்ஜ்  போடும் போது மின்சாரம் தாக்கி கீழே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அனிதாவை மீட்டு அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவரிடம் காண்பித்த போது அனிதா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து  எண்ணூர் போலீசார்க்கு  தகவல் கொடுத்தனர்  தகவலின் பேரில் எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அனிதா உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.