ஒன்றிய பட்ஜெட்டில் முட்டை- தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

 
ந் ந்

ஒன்றிய அரசின் 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி முட்டை என நாகர்கோவில் மாநகரப் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Image

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். குறிப்பாக எவ்வளவு நிதி ஒதுக்கி அறிவிப்புகள் வெளியிட்டாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு தான் பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள் என அரசியல் கட்சியினர் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து நாகர்கோவில் மாநகர பகுதி முழுவதும் இன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது, அதில் பாஜக-அதிமுக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி முட்டை என கூறப்பட்டுள்ளது. மாநகரப் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.