நிதின் கட்காரியை காரித்துப்ப வக்கில்லாமல்.. ஷோபனா மரணத்தில் திமுக ஆவேசம்

 
n

 திருவள்ளூர் மாவட்டம் போரூர் பகுதியைச் சேர்ந்தவர் சோபனா(22).   சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார்.  சோபனாவின் தம்பி ஹரிஷ்(17).   இவர் முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

 12 ஆம் வகுப்பு படிக்கும் தனது தம்பியை பள்ளியில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார்.  மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர் சாலையில் தவறி விழுந்திருக்கிறார்.  அப்பொழுது பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.  இந்த விபத்தில் சோபனாவின் தம்பி உயிர் தப்பி இருக்கிறார்.

sh

  நேற்று காலையில் சோபனா தனது தம்பியை ஸ்கூட்டியில் பள்ளிக்கு அழைத்துக்கொண்டு விட சென்று கொண்டிருந்திருக்கிறார் . அப்போது தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்திருக்கிறார்.   ஏற்கனவே பெய்த மழையினால் சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்திருக்கிறது. இந்த நிலையில் சாலையில் உள்ள பள்ளத்தால் வாகனத்தை இயக்க முடியாமல் நிலைத்திடுமாறி இருக்கிறார் ஷோபனா.

 அந்த நேரம் அருகே வந்த வேன் ஸ்கூட்டியின் மீது  உரச தம்பியுடன்  சேர்ந்து கீழே விழுந்து இருக்கிறார் ஷோபனா.  அப்போது பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி ஷோபனாவின் மீது ஏறி இறங்கியதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் ஷோபனா.

 சம்பவம் குறித்து அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சோபனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.  விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

 சர்வீஸ் சாலை குண்டும்குழியு முமாக இருப்பதால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்து  நடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஆவேசம் அடைந்திருக்கிறார்கள்.

rr

 இந்த நிலையில் இந்த விபத்துக்கு காரணம் தமிழக  அரசு என்று தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத்ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.   மேலும் பலர் தமிழக அரசை குற்றம் சொல்லி வருகின்றனர்.

இதற்கு திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி,  ’’விபத்து நடந்தது NHAI கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில்.   இந்த சாலையை செப்பனிடும் பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது. அதற்கு இன்னமும் டெல்லி அனுமதி கொடுக்காமல் வைத்திருக்கிறது’’என்கிறார்.  

அவர் மேலும்,  ‘’தங்கை சோபனாவின் இறப்பு வேதனையே. NH சாலைகளை பராமரிக்க வரி வாங்கும் பாஜகவின் அலட்சியத்தால் நடந்த கோர சம்பவம் இது. வெட்கம், மானம் கெட்டுத்திரியும் அரைவேக்காடு  அண்ணாமலை கோஷ்டிகள் எல்லாம் நிதின் கட்காரியை காரித்துப்ப வக்கில்லாமல் தமிழ்நாடு அரசை கேள்வி கேட்பதா?’’ என்று ஆவேசமாகிறார்.