மலேசியாவில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட அணில் குரங்கு
Jun 28, 2025, 13:45 IST1751098517982
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட அணில் குரங்கு (Squirrel Monkey) பறிமுதல் செய்தனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பேட்டிக் ஏர் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் உடமையை சோதனை செய்த பொழுது அந்த உடமையில் அணில் குரங்கு (Squirrel Monkey) இருந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்தக் குரங்கை பறிமுதல் செய்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது .தொடர்ந்து குரங்கை கடத்தி வந்த நபரிடம் எதற்காக அதனை கொண்டு வந்தார் எங்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


