“அடுத்த 3 மணிநேரத்தில் டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும்”

 
அ அ

அடுத்த 3 மணிநேரத்தில் டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் இருந்து தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்து சென்னையில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும், கடலூருக்கு 90 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. டிட்வா புயலின் வேகம் 7 கி.மீ.ல் இருந்து 5 கி.மீ. ஆக குறைந்ததாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயல் இன்று இரவு நேரத்தில் சென்னைக்கு நெருக்கமாக வரும்போது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.