₹4 கோடி பணம் பறிமுதல் விவகாரம் - நயினார் நாகேந்திரன் செய்த செயல்!!

 
tn

சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்த விவகாரத்தில் சம்மனுக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரி நயினார் நாகேந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார். 

tn

₹4 கோடி பணம் பறிமுதல் தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக 10 நாள்கள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.  தாம்பரம் காவல் நிலைய போலீசார் இன்று ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவகாசம் கோரி கடிதம் அனுப்பியுள்ளார். நயினார் நகேந்திரனின் வழக்கறிஞர் தாம்பரம் ஆய்வாளர் பால முரளியை சந்தித்து கடிதத்தை வழங்கினார்.

nainar
இதனிடையே தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நயினாருக்காக பணம் கொண்டு செல்வதாக சதீஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த இன்று ஆஜராகுமாறு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.