பள்ளிகளில் RTE இலவச மாணவர் சேர்க்கைக்கு 1.40 லட்சம் பேர் விண்ணப்பம்!!

 
tn

பள்ளிகளில் ஆர்டிஇ  மாணவர் சேர்க்கைக்கு 1.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி  முதல் நேற்று வரை விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டன.  மாநிலம் முழுவதும் 8ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன என தெரிவிக்கப்பட்டது. https://rte.tnschools.gov.in/ என்ற இணையதள முகவரியில் மாணவரின் புகைப்படம், சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி… விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!

இந்நிலையில்  இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது.  இதற்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.  தகுதியானவர்கள் பட்டியல் வருகிற 28ம் தேதி பள்ளிகள் மூலம் வெளியிடப்படும் என்றும்  பள்ளியில் நிர்ணயித்த இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்தால் மே 30ஆம் தேதி வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

tn

 அத்துடன்  rte.tnschools.gov.in  என்ற இணையதளம் வழியாக பெற்றோர்கள் இதன் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  ஒட்டுமொத்த சேர்த்து பணிகளையும் வருகிற ஜூன் 4-ஆம் தேதி அதற்கான அறிக்கையை தனியார் பள்ளிகள் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது .