ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 10 பேர் விளக்கம் அளிக்க சம்மன்

 
மு

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் 10 பேர் மார்ச் 7ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 7ஆம் தேதி விசாரணையை நேரடியாக தொடங்குகிறது ஆறுமுகசாமி ஆணையம் .  இதை முன்னிட்டே அப்போலோ மருத்துவர்கள் 10 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

 154 பேரிடம் விசாரணை நடத்தி இருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை எதுவும் நடத்தாமல் இருந்த நிலையில் வரும் மார்ச் மாதம் 7ம் தேதி மீண்டும் விசாரணையை தொடங்குகிறது மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 7ஆம் தேதி தொடங்கவிருக்கும் விசாரணையை நேரடி விசாரணையாக தொடங்குகிறது ஆறுமுகசாமி ஆணையம்.

ம்

கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார்.  அவரது மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.   ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர்  முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம்,   ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது விசாரிக்க வேண்டும் என்றார்.   

 இதையடுத்து  2017ம் ஆண்டில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனி ஆணையம் ஒன்றை அமைத்து 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி உத்தரவிட்டார்.  2017 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆணையம் 154 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடித்திருக்கும் நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது.

ஒப்

 மருத்துவர்களின் கண்காணிப்பு இல்லாமல் ஆணையத்தின் விசாரணை நடந்து வருவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை வழக்கில் கோரிக்கை வைத்திருந்தது.   இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது.    கடந்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.   அதேநேரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் விசாரணைக்கு பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிட்டது.   இதன் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்து இருக்கிறது.  

ச

 ஏற்கனவே நடந்த விசாரணையின்போது சசிகலா சிறையில் இருந்ததால் அவரது சாட்சியத்தை எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடம் தாக்கல் செய்திருந்தது சசிகலா தரப்பு.   சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர்,  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , ஜெயலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,  வேலை வீட்டில் பணியாற்றிய பணியாளர்கள் என்று பலரிடமும் விசாரணை நடத்தி முடித்துவிட்டது.   முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் மட்டும் இதுவரை விசாரிக்கப்படவில்லை.   எட்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத இருந்துவருகிறார் ஓபிஎஸ்.   இத்தனைக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கோரிக்கை எழுப்பிய வரே ஓ பன்னீர்செல்வம்.   தற்போது திமுக ஆட்சி என்பதால் ஓ. பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பாக கண்டிப்பாக ஆஜராகிய தீர வேண்டிய நிலை இருக்கிறது.    ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்ற சொன்ன ஓபிஎஸ் தற்போது மர்மம் இல்லை என்று சொன்னால் சிக்கலுக்கு ஆளாக வேண்டிய நிலை வரும்.

 அதனால்தான் அவரை விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார் என்ற தகவல்.    ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்திருப்பதால் சசிகலா ஏற்கனவே எழுத்துப்பூர்வ சாட்சியத்தின் அடிப்படையில் சாட்சியம் அளித்து இருப்பதால் அவர் நேரில் அழைக்கப்படுவாரா இல்லையா என்பது உறுதியாகவில்லை.   ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்யும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்கிற தகவல் பரவுகிறது.

ஆஅ

 ஆணையம் விரைவில் விசாரணை அறிக்கையை தயார் செய்து அரசுக்கு வழங்கும்போது ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும் என்று தெரிகிறது.   கொடநாடு கொலை கொள்ளை வழக்கு அதிமுக தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஜெயலலிதாவின் மரண வழக்கு அதிமுகவுக்கு மேலும் நெருக்கடியை கொடுத்து வருகிறது.