சென்னை வில்லிவாக்கத்தில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது - ரூ.67,000 பறிமுதல்

 
arrest

வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீட்டு உரிமையாளர் உட்பட 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 8 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.67,000 பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, V-1 வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (10.12.2023) இரவு, வில்லிவாக்கம், பாரதி நகர் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டையை கண்காணித்தபோது, அங்கு சிலர் பணம் பந்தயம் வைத்து சீட்டு கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

arrest

அதன்பேரில் மேற்படி இடத்தில் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 1.சக்திவேல், வ/48, த/பெ.தாயாளன், வில்விவாக்கம், 2.கோவிந்தராஜ், வ/64, த/பெ.தனபால், வில்விவாக்கம், 3.அந்தோணி, வ/35, த/பெ.மொஷஸ், வில்விவாக்கம். 4.பாலாஜி, வ/40, த/பெ.ராவணன், வில்விவாக்கம், 5.பாஸ்கர், வ/45, த/பெ.கபாலி, வில்விவாக்கம் உள்பட 10 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 8 செல்போன்கள் மற்றும் பணம் ரூ.67,000/- மற்றும் 09 சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக V-1 வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 10 நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.