தமிழகத்தில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்

 
anna univ

தமிழகத்தில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Anna University (AU) Chennai: Admission, Fees, Courses, Placements, Cutoff,  Ranking

வரும் கல்வியாண்டில் அங்கீகாரம் பெறுவதற்கு 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.  ஏற்கனவே தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில்  494 தனியார் இணைப்புக் கல்லூரிகள் உள்ள நிலையில் அவற்றுள் 10 கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மூடப்பட உள்ளது, மாணவர் சேர்க்கை போதியளவு இல்லாததன் காரணமாக அங்கீகாரம் பெறுவதற்கு இந்த கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை. 

நேற்று அகில் இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு, பி.இ, பி.டெக், பி.ஆர்க் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு செமஸ்டருக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்சமாக ரூ. 1,89,800 ஆகவும் பரிந்துரைந்துள்ளது. முன்னதாக  இக்கட்டணம் ரூ. 55 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சத்து 15 ஆயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல், டிப்ளமோ படிப்புகளுக்கான கட்டணங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சம் ரூ.67,900 முதல் அதிகபட்சம் ரூ.1,40,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.