தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி பலி - லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம்

 
child

சென்னை அருகே கோவிலாம்பாக்கத்தில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தை சேர்ந்த கீர்த்தி தனது பத்து வயதான மகளை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். தாய் கீர்த்தியுடன் பள்ளிக்கு செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சிறுமி நிலைத்தடுமாறி இரு சக்கரவாகனம் கீழே விழுந்தது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி சிறுமியின் மீது ஏறியது. இந்த விபத்தில் அந்த சிறுமி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது. இதனை பார்த்த தாய் கீர்த்தி கதறி அழுதார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

அப்பகுதியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரிகள், போக்குவரத்து விதிகளை சிறிதும் மதிக்காமல் அதிவேகத்தில் செல்வது பற்றி பல செய்திகள், புகார்கள் வெளியான நிலையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். தாய் கண் முன்னே மகள் லாரியில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.