100 நாள் வேலை திட்டம் - தமிழகத்திற்கு ரூ.2999 கோடி ஒதுக்கீடு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.2999 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது,

தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மத்திய அரசு நிதி வழங்காமல் அலைக்கழித்து வந்தது. ஏறக்குறைய 4034 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு வராததால் அதன் மூலம் பயனடைந்து வந்த பெண்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. இந்த நிலையில் உடனடியாக ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.2999 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 2024-25ம் ஆண்டில் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படாத நிலையில், ஊதிய பொறுப்புக்காக ரூ.2851 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் மொத்த நிலுவைத்தொகை ரூ.3170 கோடி, தற்போதைய நிலவரப்படி அரசுக்கு ரூ.1111 கோடி கிடைத்துள்ளது. 2024-25ம் ஆண்டுக்கான நிலுவைத்தொகை ரூ.1246 கோடி, மீதித்தொகையை மத்திய அரசு வழங்கும் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


