"அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி தேவை" - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!!

 
anbil magesh

தமிழ்நாடு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி உறுதி செய்வதே  இந்த கல்வியாண்டிற்கான இலக்கு என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

schools leave

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவிகளை பூங்கொத்து அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்றார். பின்னர் மாணவிகளுக்கு புத்தகங்கள். புத்தக பை, சீருடை, காலணிகள் ஆகியவற்றையும் வழங்கினார்.

anbil

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1. 31 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் . ஆகஸ்ட் மாதம் வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி கொடுக்க ஆசிரியர்கள் அதிகாரிகள் இலக்கண நிர்ணயிக்க வேண்டும்.  வகுப்பறைகளில் தண்ணீர் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் .உடற்கல்விக்கென  தனிப்பாடம் கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்படும், மாநில கல்விக் கொள்கை குறித்து முழு அறிக்கை அளித்தபின் முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும்.11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை" என்றார்.