முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் முறைகேடு: 10,000 ஓட்டு இறந்தவர்களின் பெயரில் உள்ளது - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்..!
Dec 2, 2025, 16:00 IST1764671453000
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இபிஎஸ் தலைமையில் மக்களின் ஆதரவுடன் சிறந்த ஆட்சி அமையும். எஸ்ஐஆர்- ஐ வைத்து திமுகவினர் மக்களை குழப்பி, அவர்கள் தமது வேலைகளை பார்த்து வருகின்றனர். பீஹாரில் 65 லட்சம் ஓட்டுக்கள் நீக்கப்பட்டது போல், தமிழகத்தில் சுமார் 75 லட்சம் ஓட்டுக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என தெரிய வருகிறது.
இதில் 2002க்கு பின்னர் இறந்தவர்களின் ஓட்டுக்களே இருக்கும். உதாரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நின்று வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் மட்டும் 10 ஆயிரம் ஓட்டுக்கள் இறந்தவர்களின் பெயரில் உள்ளது. அதனை நீக்குவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


