மிக்ஜாம் புயல் - வீடுகளை இழந்தோருக்கு ரூ.10,000 நிவாரணம்: ஆந்திரா முதல்வர்

 
ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் மிக்ஜாம் புயல் காரணமாக பல இடங்களில் பலத்து சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த புயல் பாபட்லா - மசூலிப்பட்டினம் இடையே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதனால் பாபட்லா, குண்டூர், பல்நாடு, கிருஷ்ணா, கிழக்கு மற்றும் கோதாவரி மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை டூ ஆந்திரா செல்லும் வாகனங்கள் சூலூர்பேட்டை அருகே தடுத்து நிறுத்தம் |  Vehicles in Chennai to Andhra stopped near Sulurpet for cyclone Michaung


திருப்பதி, நெல்லூர், சித்தூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலார்ட் விடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக பல அனைகள் நிரம்பியதால பல இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  இதனால் தாழ்வான பகுதியில் உள்ள மக்களும், கடலோரம் உள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 381 புனர்வாழ்வு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தொடர் மழையின் காரணமாக பல இடங்களில் மரங்கள் சாய்ந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை - நெல்லூர் இடையே காலங்கி ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு செல்வதால் இந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 39 கிராமங்கள்  தீவுகளாக மாறியுள்ளது அவர்களுக்கு தேவையான பொருட்களை வருவாய் துறை அதிகாரிகள் முன்கூட்டிய ஏற்பாடு செய்தவற்றை வழங்கி உள்ளனர். 

சென்னைக்குப் பிறகு ஆந்திராவில் மிச்செல் புயல் கோரத்தாண்டவம்: 8  மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு | Cyclone Michaung Heavy rain in andhra  pradhesh 8 districst affected

இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2,000 நிதி உதவியும் , 25 கிலோ அரிசி, உணவு பொருட்கள் வழங்கவும் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் வழங்கவும் முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் மீட்பு பணியல் 7 மாநில பேரிடர் மீட்பு படையினரும்  5 தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுப்பட்டுள்ளனர். விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் அனைத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி, நெல்லூர் மாவட்டங்களில் பல இடங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.