வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு அடிக்கல் - 24 மாவட்டங்களில் 1004 சிறப்பு தூர்வாரும் பணிகள் தொடக்கம்!!

 
tn

சிவகங்கை (ம) தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன கட்டமைப்புகள் (ம) வெள்ளத் தடுப்புப் பணிகள், திருச்சிராப்பள்ளி மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நீரொழுங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட 6 தென் மாவட்டங்கள், மிக்ஜாம் புயல் & மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 503 நிரந்தர சீரமைப்பு, வெள்ளத் தணிப்பு & வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 24 மாவட்டங்களில் 1004 சிறப்பு தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

tn

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 27.2.2024 அன்று தலைமைச் செயலகத்தில், செயலகத்தில், நீர்வளத்துறை சார்பில் சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 111 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாசன கட்டமைப்புகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள், திருச்சிராப்பள்ளி மாவட்டம், முக்கொம்பில், கொள்ளிடம் ஆற்றில் 414 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நீரொழுங்கி ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். மேலும், அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட 6 தென் மாவட்டங்கள் மற்றும் மிக்ஜாம் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 726.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 503 நிரந்தர சீரமைப்பு, வெள்ளத் தணிப்பு மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களில் 115 கோடி ரூபாய் செலவில் 5814.295 கி.மீ. நீளத்திற்கு 1004 சிறப்பு தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார்.

நீர்வளத்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாசன கட்டமைப்புகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தல்


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், கட்டிக்குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு நீர் வழங்க வைகை ஆற்றின் குறுக்கே 30 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில், 6,316.41 ஏக்கர் பாசன பரப்பு பயன்பெறும் வகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அணைக்கட்டு;

தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களில் 5814.295 கி.மீ நீளத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ள 1004 சிறப்பு தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தல்



சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் 5814.295 கி.மீ நீளத்திற்கு 115 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் மற்றும் வடிகால்களில் சிறப்பு தூர்வாரும் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இத்தூர்வாரும் பணிகளை செயல்படுத்துவதன் மூலமாக 14,55,680 ஏக்கர் பாசனப்பரப்பு பயன்பெறும். மேலும், நீர் ஒட்டம் பராமரிக்கப்பட்டு அதனை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகள், திறந்த கிணறுகளில் நிலத்தடி நீர்மட்ட அளவும் மற்றும் நீரின் தரமும் மேம்படும்.

நீர்வளத்துறை சார்பில் செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக ரூ.4.48 கோடி மதிப்பிலான 50 ஈப்புகள் வழங்குதல்

மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் சுமார் 20 ஆண்டுகள் பழமையானதால், திட்ட ஆய்வு பணிகளை செவ்வனே மேற்கொள்ளும் வகையில் உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் (TNIAM PROJECT) கீழ் புதிய வாகனங்கள் வழங்கிடும் விதமாக 4 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 50 ஈப்புகளை நீர்வளத்துறையின் செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அவ்வாகனத்திற்கான சாவிகளை செயற்பொறியாளர்களுக்கு வழங்கினார்.