மஞ்சள், குங்குமத்தில் 108 விநாயகர் ஓவியங்கள் - பள்ளி மாணவி அசத்தல் முயற்சி..

 
மாணவி ஸ்ரீநிதி

நெல்லையில் கின்னஸ் சாதனை முயற்சியாக மஞ்சள் குங்குமத்தை மட்டும் வைத்து வித விதமாக 108 விநாயகர் ஓவியங்களை வரைந்து பள்ளி  மாணவி ஒருவர் அசத்தியுள்ளார்.
 மாணவி ஸ்ரீநிதி வரைந்த ஓவியம்
நெல்லை சிவராம் கலைக்கூடத்தைச் சேர்ந்தவர் மாணவி ஸ்ரீநிதி. இவர்  கலர் ஓவியம்,  வாட்டர் கலர் ஓவியம்,  பென்சில் ஓவியம்,  ஆயில் பெயிண்டிங் போன்றவற்றில்  மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில்  இவர் மஞ்சள் மற்றும் குங்குமத்தை மட்டுமே கொண்டு ராஜ விநாயகர்,  செல்வவிநாயகர் என விதவிதமான விநாயகர் உருவங்களை  வரைந்திருக்கிறார்.  மாணவி வரைந்த 108 விநாயகர் ஓவியங்களும் அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  இந்த ஓவியங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.  மாணவி வரைந்த விநாயகர் ஓவியங்கள் கின்னஸ் சாதனை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

மாணவி ஸ்ரீநிதி வரைந்த ஓவியம்

108 விநாயகர் படங்களை மஞ்சள் மற்றும் குங்குமத்தை மட்டுமே வைத்து  வரைந்து காட்சிப்படுத்த வேண்டும் என தோன்றியதாகவும், அதன்படி  இந்த முயற்சியை கையில் எடுத்து  விதவிதமான விநாயகர் படங்களை வரைந்து   தற்போது காட்சிப்படுத்திய உள்ளதாகவும் தெரிவித்தார்.  இந்த முயற்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடப்புறம் வேண்டும் என்பது தனது மிகப்பெரிய ஆசை எனவும்,  இந்த படங்களை வரையும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் மாணவி ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.