10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் - 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்!!

 
school

12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேர் எழுதி உள்ளனர்.  இதில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் .ஒட்டுமொத்தமாக பத்தாம் வகுப்பில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

பத்தாம் வகுப்பில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 491 மாணவிகளும்,  4 லட்சத்து 60 ஆயிரத்து 120 மாணவர்களும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவிகள் 94.5 சதவீதமும் மாணவர்கள் 87.7 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

School Education

இந்நிலையில் பத்தாம் வகுப்பில் பாட வாரியான தேர்ச்சி விகிதம் ஆனது தெரிவிக்கப்பட்டுள்ளது.  மொழி பாடத்தை பொறுத்தவரை 94.84% பேரும் , ஆங்கில பாடத்தை பொறுத்தவரை 96.18 சதவீதம் பேரும், கணிதத்தைப் பொறுத்தவரை 90.89 சதவீதமும் , அறிவியலில் 93.67 சதவீதமும்,  சமூக அறிவியலில் 91.86 சதவீதமும் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர், 

பத்தாம் வகுப்பில் 100%  மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மொழி படத்தைப் பொருத்தவரை ஒன்று ஆக பதிவாகியுள்ளது.  ஆங்கிலத்தில் 45 பேரும், கணிதத்தில் 2186 பேரும் ,அறிவியலில் 3841 பேரும் , சமூக அறிவியலில் 1009 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

tn

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வணிகவியல் பாடத்தில் 4,634 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள்  பெற்றுள்ளனர். கணக்குப் பதிவியல் பாடத்தில் 4,540 மாணவர்களும் , கணினி அறிவியல் பாடத்தில் 3,827 மாணவர்களும், இயற்பியலில் 634 பேரும்,  வேதியியலில் 1,500 பேரும், உயிரியலில் 1541 பேரும் ,கணிதத்தில் 1858 பேரும்,  தாவரவியலில் 47 பேரும் , விலங்கியலில்22 பேரும்,  பொருளியலில் 1146 பேரும்,  கணினி பயன்பாடுகள் 2818 பேரும் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.