10ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு..

 
பொதுத்தேர்வு

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

நடப்பாண்டு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையின் படி 12ம் வகுப்பு  மாணவர்களுக்கு மார்ச் 13 நாளை தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. 11ம் வகுப்புக்கு  14-ந்தேதி  முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு  ஏப்ரல் 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.  இதில் 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று  வருகிறது.  

 தேர்வுத் துறை இயக்ககம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.   ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு  முடிவுகள் மே 17ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல்   https://dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.