10-02-2023 இன்றைய ராசிபலன்- செலவுகள் அதிகரிக்கும் நாள்

 
Rasi palan

சுபகிருது வருடம் 2023  I தை 27 | வெள்ளிகிழமை 10-02-2023

மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று நீங்கள் புதிய கட்ட வளர்ச்சி நோக்கி முன்னேறுவீர்கள். முறையான திட்டமும் தொழில் சார்ந்த அணுகுமுறையும் உங்கள் முயற்சியில் வெற்றியை ஏற்படுத்தும். உங்கள் பணியில் பெயரும் புகழும் பெறுவீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். உங்கள் துணையிடம் நேர்மையான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பை உயர்த்துவீர்கள். உங்கள் தரத்தை உயர்த்துவீர்கள்.இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்கை நோக்கி முயற்சி செலுத்துவீர்கள். இதன் மூலம் திருப்தியான பலன் கிடைக்கும். உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கடின உழைப்பின் மூலம் வெற்றி காண்பீர்கள். சக பணியாளர்களிடம் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். உங்கள் துணையிடம் நேர்மையான முறையில் உணர்வுகளை வெளிபடுத்துவீர்கள். இது நல்லுறவு ஏற்பட வழி வகுக்கும். இன்று நிதிநிலை சிறப்பாக இருக்கும். கணிசமான தொகை சேமிப்பீர்கள். திருப்திகரமான நிலை பெறுவீர்கள்.

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று ஏற்படும் பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். நம்பிக்கை உணர்வின் மூலம் நற்பலன்களைப் பெறலாம். இன்று மன திடமும் நம்பிக்கையும் வேண்டும். இதன் மூலம் தடைகளைசமாளித்து உங்கள் பணிகளை ஆற்ற முடியம்.உங்கள் துணையை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.கருத்து வேறுபாடு காணப்படும். நீங்கள் தேவையற்ற பேச்சுக்களை பேசுவீர்கள். இன்று பணம் குறைந்து காணப்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதாக உணர இயலாது. 


கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களிடம் காணப்படும் உத்வேகம் காரணமாக நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். உங்கள் நலத்திற்கான பயனுள்ள முடிவை விரைவாக எடுக்கும் வகையில் உங்கள் மனநிலை இருக்கும். உங்களிடம் இருக்கும் சிறப்பான தகுதி காரணமாக இன்று உங்கள் செயல்களை சிறப்பாக செய்வீர்கள். உங்கள் பணிக்கு சிறந்த அங்கீகாரம் பெறுவீர்கள். உங்கள் மனதில் ஓடும் உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவரிடையேயான உறவு மேம்படும். இன்று நிதி வளர்ச்சி சிறப்பாகவும் மகிழ்சிகரமாகவும் இருக்கும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்க காண்பீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் இலக்குகளை நேர்மையான முயற்சி மூலம் அடைவீர்கள். உங்களிடம் உறுதியும் தைரியமும் காணப்படும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும்.உங்கள் பணியில் நல்ல பெயரெடுப்பீர்கள். உங்கள் பணி செய்யும் முறை காரணமாக உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்குவீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று அதிக பண வரவு காணப்படும். உங்கள் வங்கியிருப்பை அதிகரிப்பீர்கள். உங்களின் வளர்ச்சி கண்டு மகிழ்வீர்கள்.

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று சிறிது பாதுகாப்பின்மை உணர்வும், குறைந்த மகிழ்ச்சியும் காணப்படும். எனவே அமைதியாக இருப்பது சிறந்தது. பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் நீங்கள் உங்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பை இழப்பீர்கள். உங்கள் துணையுடன் தகவல் பரிமாற்ற பிரச்சினை காணப்படும். உங்களிடம் இன்று சிறந்த மன நிலை காணப்படாது.எனவே இன்று இருவரும் பேசுவதை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களால் பணத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க இயலாது. பண வரவு காணப்பட்டாலும் தேவையற்ற செலவுகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.


துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் இலக்குகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்றைய நாள் சிறப்பாக அமைய இன்று பொறுமை அவசியம். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். சக பணியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்கள் காதலை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். என்றாலும் நல்ல புரிந்துணர்வு ஏற்பட குறைந்த வாய்ப்பே உள்ளது. இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்றைய நாளை பயனுள்ள முதலீடுகள் செய்ய பயன்படுத்திக்கொள்ளுங்கள் இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். 

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று சம்பவங்களை சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வளர்ச்சியை தடுக்கும் எந்த உணர்விற்கும் இடம் கொடுக்கக் கூடாது. உங்கள் அணுகுமுறையில் விவேகம் வேண்டும்.பணியிடச் சூழல் குறைந்த அனுகூலத்துடன் காணப்படும். சகபணியாளர்களுடன் பிரச்சினை காணப்படும். திட்டமிட்டு பணிகளை திறமையாக ஆற்ற வேண்டும்.உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள இயலாது. நீங்கள் இன்று சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்வீர்கள். இது நல்லுறவை பாதிக்கும். இன்று பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகளும் காணப்படுகின்றது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்களின் சொந்த முயற்சி மூலம் வெற்றி காண்பீர்கள். அதே சமயத்தில் திருப்தி குறைந்து காணப்படும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். பணிகளை விரும்பி ஆற்றுவீர்கள்.உங்கள் துணையை சந்திப்பதில் மகிழ்ச்சியடைவீர்கள். இருவரும் பயனுள்ள விஷயங்களைப் பேசுவீர்கள். இது உங்கள் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட உதவும்.இன்று பண வரவு அதிகமாக காணப்படும். பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு செலவு செய்ய பயன் படுத்துவீர்கள்.


மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய செயல்களை மேற்கொள்வதை கடினமாக உணர்வீர்கள். இதனால் உங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள். எனவே உங்கள் அணுகுமுறையில் பொறுமையும் உறுதியும் அவசியம்.இன்று உங்கள் பணிகள் சுமூகமாக நடக்காது. உங்கள் சக பணியாளர்களிடம் அமைதியை கையாளவும். உங்கள் துணை உங்களை புறக்கணிப்பதாக எண்ணுவீர்கள். அதனால் எரிச்சல் உணர்வை துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. இதனால் மனதில் குழப்பம் காணப்படும். எதிர்பாராத வகையில் பணம் வந்தாலும் அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்த இயலாது.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று தடைகளும் தாமதங்களும் நிறைந்து இருப்பதாக உணர்வீர்கள். முக்கிய முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளிப் போடுவது நல்லது. நல்ல இசையைக் கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.பணிகள் சுமூகமாக நடக்க சகபணியாளர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் துணையுடன் சண்டையில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதனால் திருப்தியான மனநிலை காணப்படாது. இன்று தேவையில்லாத செலவுகள் காணப்படும். வீட்டை புனரமைப்பதற்கு பணத்தை செலவு செய்வீர்கள்.


மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்களிடம் உறுதி இருந்தால் இன்று வளர்ச்சி காண்பீர்கள். நம்பிக்கையுடன் இருந்தால் வெற்றி உங்கள் கதவைத் தட்டும். உங்கள் பணிக்கு பாராட்டு பெறுவீர்கள். உங்களிடம் காணப்படும் ஆற்றல் உங்கள் பணியில் பிரதபலிக்கும். இன்று மகிழ்ச்சியான மாலைப் பொழுதாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியுடன் கானப்படுவீர்கள். அதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இன்று நிதிநிலை பொதுவாக சிறப்பாக உள்ளது. என்றாலும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரலாம். உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி மற்றும் நேர்மறையான மனநிலை காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்