தாய் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

 
suicide

காட்பாடி அரும்பருத்தியில் தாய் கண்டித்ததால் அரசு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காட்பாடி பிரம்மபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரும்பருத்தி பகுதியில் கணவரை இழந்து இரண்டு மகன்களுடன் வசித்து வருபவர் தரணி. இவரது மூத்த மகன் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகன் கிருஷ்ணா கார்ணாம்பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை பள்ளி முடிந்து தனது வீட்டிற்கு வந்துள்ளான். அப்போது தாய் தரணி அருகிள் உள்ள ரேஷன் கடைக்கு சென்று வர மகன் கிருஷ்ணாவை அழைத்துள்ளார். அவர் வர மறுக்கவே, தாய் கண்டித்து விட்டு தனது மகனை ரேஷன் கடைக்கு அழைத்துள்ளார்.


அதனால் கிருஷ்ணா வர மறுக்கவே தாய் அவரை கண்டித்து விட்டு தனது மூத்த மகனுடன் ரேஷன் கடைக்கு சென்று உள்ளார். ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது கிருஷ்ணா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அதை கண்ட தாய் தரணி கூச்சல் போடவே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து கிருஷ்ணாவின் உடலை கீழே இறக்கி அருகில் உள்ள கருகிரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து இறந்த அரசு பள்ளி மாணவனின் தாய் தரணி பிரம்மபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் கண்டித்து தான் எட்டாம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.