எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

 
fishermen

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

fishermen

இலங்கை பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகையைச் சேர்ந்த 11 பேர் மற்றும் ஒரு விசைப்படகு இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 11 பேரும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

தமிழ்நாட்டு மீனவர்கள் தாங்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த பகுதிகளில் தான்  மீன் பிடித்து வருகின்றனர் என்ற போதிலும், அவர்களை சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது வாடிக்கையாகிவிட்டது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இந்திய - இலங்கை அதிகாரிகள், தமிழக  - இலங்கை மீனவர்கள் ஆகியோர் பங்கேற்கும் பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்து,  இந்திய, இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மீன் பிடிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கும்படி பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.