"வீடு வாடகைக்கு எடுத்து சூதாட்டம்" - 11 பெண்கள் அதிரடி கைது!!

 
arrest

சென்னை சேத்துப்பட்டில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

tn

சென்னையில் லாட்டரி சீட்டுக்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வது மற்றும் பணம் வைத்து சூதாடுவது  ஆகியவை குற்றங்களாக பார்க்கப்படும் நிலையில்,  பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக சென்னை போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  இது தொடர்பாக ஏதேனும் புகார்கள் எழுந்தாலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதை சென்னை மாநகர காவல்துறையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

arrest

அந்த வகையில் சென்னை சேத்துப்பட்டு எஸ்.எம்.நகர் பகுதியில் ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக சேத்துப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு உடனடியாக விரைந்து திடீர் சோதனை மேற்கொண்டனர் . இதில் சட்டவிரோதமாக  சூதாட்டத்தில் ஈடுபட்ட துரைராஜ் மற்றும் 11 பெண்கள் உட்பட 12 பேரைப் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகளும், 18 ஆயிரத்து 870 ரூபாய் ரொக்கமும்  பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் நீண்ட நாட்களாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இதுபோன்று சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.