தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

 
test

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. 7ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 மாணவ மாணவிகள் இத்தேர்வை எழுத உள்ளனர். 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர். வரும்  31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் நிலையில், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்வு எழுதுகின்றனர். இன்று தமிழ் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில் 12ஆம்தேதி ஆங்கில தேர்வு நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், பேசிக் எலக்ட்ரிக்கல், என்ஜினீயரிங், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பேசிக் சிவில் என்ஜினீயரிங், பேசிக் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், பேசிக் மெக்கானிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டெல் டெக்னாலஜி, ஆபிஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் செக்கரேட்டரிஷிப் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடக்கிறது.

test

தமிழகத்தில்  12ஆம் வகுப்புக்கு  கடந்த மே 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12ஆம் வகுப்புக்கு பொதுதேர்வானது  28ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதேபோல 10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி தொடங்கிய தேர்வு  30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான முடிவு ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்றும்  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.