பள்ளிக்கு சென்ற 11ம் வகுப்பு மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு
செங்கம் அருகே 11-ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள தண்டராம்பட்டு ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் அபிநயா. தந்தை கணேசன். அபிநயா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார் , வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவி அபிநயா, பள்ளிச் சீருடையுடன் கிணறு ஒன்றில் சடலமாகக் கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தண்டராம்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மாணவியின் சடலத்தை மீட்டனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தண்டராம்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவி அபிநயாவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவி கிணற்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தச் சம்பவம், தண்டராம்பட்டு மற்றும் செங்கம் வட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


