வெறுமனே கடிதங்களை எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதா? ஸ்டாலினை சாடும் தினகரன்

 
TTV STALIN

ராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது . அத்துடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்ற காவலில் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

fishermen

ஏற்கனவே கடந்த 8ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்ட 11 பேரையும், 3 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் இன்னும் விடுவிக்காத  நிலையில் 9ஆம் தேதியிலிருந்து ராமேஸ்வர மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற போது,  தற்போது மீண்டும்  ராமேஸ்வரம் மீனவர்கள் கைதான சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவது அச்சுறுத்தலை தருவதாகவும், வாழ்வாதாரத்தை கேல்வகுறியாக்குவதாகவும் மீனவர்கள்  கவலை தெரிவித்துள்ளனர். 

fisher

இந்நிலையில் இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக மீனவர்கள் அண்மைக்காலமாக அடுத்தடுத்து சிறை பிடிக்கப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், படகுகளைக் கைப்பற்றி ஏலம் விடுவதுமான இலங்கை அரசின் அட்டூழியங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறோம்? வெறுமனே கடிதங்களை எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதாக மத்திய, மாநில அரசுகள் நினைப்பது கண்டனத்திற்குரியது.தனுஷ்கோடி அருகே மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுவிக்கசெய்வதுடன், இனிமேலும் இந்த அவலம் தொடராமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.