கணித வினாத்தாள் லீக் ; திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

 
dpi building

பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு கணித  வினாத்தாள்கள் கசிந்தாலும்  இன்று திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது.  இந்த ஆண்டும் அதே போல் அறிவிக்கப்படுமா?  என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்த நிலையில்,  நடப்பு ஆண்டுக்கான பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது. 

schools open

 அதன்படி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி வெளியிடப்பட்டது.   10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு இன்றுமுதல்  தொடங்க இருந்தது.  அந்த வகையில்  12ஆம் வகுப்புக்கான கணித தேர்வுக்கான இரண்டுவகையான வினாத்தாள்கள்   தேர்வுக்காக  தயார் நிலையில் இருந்த நிலையில் நேற்று முன்கூட்டியே  சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

school

 பாதுகாப்பாக வைக்கப்பட்ட வினாத்தாள்கள் எப்படி வெளியானது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இருப்பினும் புதிய வினாத்தாள் நேற்று இரவோடு இரவாக தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் வழியாக இன்று காலை அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.  இதனால் திட்டமிட்டபடி பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு கணிதம் பாடம் நடைபெறும் இன்று முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாம்.

school

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்ற போதும் வினாத்தாள்கள் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியது . தற்போது இரண்டாம் கட்ட திருப்புதல்  தேர்வின் போதும் இதே சூழல் ஏற்பட்டுள்ளது பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.